மணிமேகலை தப்புனா பரபரப்பு புரோமோ வெளியிடும் விஜய் டிவி இதை ஏன் செய்யவில்லை?
CineReporters Tamil September 20, 2024 11:48 PM

VijayTv: விஜய் டிவியின் வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி இதுவரை பாசிட்டிவிட்டியால் ரசிகர்களை கட்டிப்போட்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக பஞ்சாயத்துகள் நிறைந்து பலரால் விமர்சிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

கடந்த வாரம் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலை பாதி எபிசோடில் வெளியேறினார். இது பொதுவாக பல ரியாலிட்டி ஷோக்களில் நடக்கும் விஷயம் தான் என்பதால் ரசிகர்கள் முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் அன்றைய நாளை மணிமேகலை தனக்கு சுயமரியாதை தான் முக்கியம். அடக்குமுறை மற்றும் நெகட்டிவிட்டி நிறைந்திருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிலும் அவர் பிரியங்கா மீது ஓபனாக வைத்த குற்றச்சாட்டு பலரை அதிர்ச்சியடைய செய்தது.

இதைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு உருவாகி இருக்கிறது. அதை வேளையில் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு விமர்சனங்களும் குவிந்து வருகிறது. ஒரு வாரமாக அமைதியாக இருந்த அவர் பக்கத்து தரப்பு கடந்த இரண்டு நாட்களாக பேட்டிகள் மற்றும் வீடியோக்கள் மூலம் பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் ரசிகர்கள் ஒரு கேள்வியை முன்வைத்து வருகின்றனர். பொதுவாகவே விஜய் டிவிக்கு சிலர் சண்டையிடும் ப்ரோமோக்களை வெளியிட்டு வைரல் ஆக்குவது வழக்கம். இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜோடி நிகழ்ச்சியில் சிலம்பரசன் மற்றும் பிரித்விராஜ் சண்டையை வெளியிட்டு பெரிய அளவில் ஹீட் கொடுத்தது.

இதேபோல் டிவி தரப்பு மணிமேகலை மேல்தான் தப்பு இருப்பதாக பிரபலங்கள் மூலம் கூற வைத்திருப்பதால், அது உண்மையாக இருந்தால் ஏன் அதை எபிசோடில் வெளியிட்டு இருக்கலாமே? விஷயமும் இன்னும் பரபரப்பாக இருந்திருக்கும். உண்மையில் பிரியங்கா மீது தப்பு இல்லாமல் இருந்திருந்தால் அது ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும் தானே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதை எடிட் செய்து விட்டு தற்போது மணிமேகலை மேல் தப்ப இருப்பதாக பிரியங்கா தன்னுடைய நெருங்கிய தரப்பை வைத்து பேச வைத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் மேலும் வலுத்து வருகிறது. இந்த சூழலில் வீடியோக்களை தயாரிப்பு நிறுவனம் தரப்பு வெளியிட்டால் மட்டுமே ரசிகர்கள் பலர் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளலாம் எனவும் நம்பப்படுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.