ரேவதிக்கு வந்த முதல் பட வாய்ப்பு எது தெரியுமா? பாரதிராஜா அறிமுகப்படுத்தியது இப்படித்தான்..
Tamil Minutes September 20, 2024 11:48 PM

Revathi : கேரளாவினை பூர்வீகமாகக் கொண்ட ஆஷா என்ற இயற்பெயர் கொண்ட நடிகை ரேவதி தமிழில் மண் வாசனை படத்தின் மூலமாக அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரியும். மண் வாசனை படத்தின் ஹிட்டுக்குப் பிறகு அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகொடுக்கும் கை, வைதேகி காத்திருந்தாள் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். தொடர்ந்து ரேவதி நடித்த படங்கள் ஹிட் ஆகவே குறுகிய காலத்திலேயே தமிழின் நம்.1 நடிகையாக மாறினார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறனைக் காட்டினார்.

தன்னுடைய அமைதியான இயல்பான நடிப்பாலும், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம் கொண்டதாலும் குறுகிய காலத்திலேயே சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கவர்ச்சி இல்லாமல், அற்புதமான நடிப்பு, நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து நடித்ததால் 90-களின் தொடக்கம் வரை முன்னனி நடிகையாகத் திகழ்ந்தார் ரேவதி. நடிப்பு மட்டுமல்லாமல் டப்பிங், சமூக சேவை என பல துறைகளிலும் கால்பதித்தார்.

எதிர்பார்ப்புடன் வெளிவந்த சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லத்துரை..எப்படி இருக்கு? விமர்சனம்

இயக்குநர் இமயம் பாரதிராஜா இவரை ஹீரோயினாக நடிக்க வைத்தது எப்படி தெரியுமா? நடிகை ரேவதி கேரளாவில் மாடலிங் துறையில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது பேஷன் ஷோக்களில் பங்குபெற்று அதனை ஆல்பமாக வைத்திருக்கிறார். பின்னர் ரேவதியின் குடும்பம் சென்னை நந்தனத்திற்குக் குடி பெயர்ந்திருக்கிறது. பாரதிராஜாவின் சகோதரர் வீடு ரேவதியின் வீட்டுக்கு மாடியில் தான் இருந்திருக்கிறது. அப்போது அங்கு அடிக்கடி வரும் பாரதிராஜா எதேச்சையாக ஒருநாள் ரேவதியின் ஆல்பங்களைப் பார்த்திருக்கிறார்.

ஆனால் அப்போது அவர் காதல் ஓவியம் பட வேலைகளில் இருந்தார். ஆனால் இந்தக் கதைக்கு ரேவதி சற்று வயது குறைவானதாக தோற்றம் கொண்டதாக இருந்ததால் காதல் ஓவியம் படத்தில் ரேவதி நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இதனையடுத்து அடுத்ததாக மண் வாசனை படத்தில் ரேவதியை நாயகியாக்கினார் பாரதிராஜா. நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாதே ரேவதிக்கு பாரதிராஜா படிப்படியாக நடிப்பு கற்றுக் கொடுத்து குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவின் நம்.1 நடிகையாக வலம் வரச் செய்ததில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் பாரதிராஜா.

மேலும் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரின் படங்களிலும் ரேவதி கதாநாயகியாக நடித்து சினிமாவில் பெரிய ரவுண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் கதைக்கு முக்கியமான படங்களில் நடித்து வருகிறார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.