ஜம்முவில் 40 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த பேருந்து... 4 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம்... 32 வீரர்கள் காயம்!
Dinamaalai September 21, 2024 01:48 PM

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் புட்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் 36 பேர் ஒரு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். பிஎஸ்எஃப் வீரர்கள் சென்றுக் கொண்டிருந்த பேருந்து மலைப்பாதையின் ஒரு வளைவில் திரும்ப முயன்ற போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 40 அடி ஆழத்தில் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 32 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பிரெய்லி வாட்டர்ஹால் பகுதியில் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து அதிகாரியின் கூற்றுப்படி, பேருந்தில் 36 பிஎஸ்எஃப் வீரர்கள் இருந்துள்ளனர். சாலையில் இருந்து தவறி விழுந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளனாது. இந்த விபத்தில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக அதிகாரி தெரிவித்தார். இதில் 32 வீரர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.