சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு... கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 14 கிலோ கஞ்சா!
Dinamaalai September 21, 2024 06:48 PM

தமிழகத்தில் சமீப காலங்களாக கஞ்சா விற்பனையும், கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெருமளவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், 14 கிலோ கஞ்சா சூட்கேஸில் வைத்து கடத்தப்பட்டு வரப்பட்ட நிலையில், கேட்பாரற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கடத்தி வந்தவர்கள் யார் என்கிற விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயிலில் கடத்தி வரப்பட்ட பொருட்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது. தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயிலில் வந்த பயணிகளை சோதனை செய்தனர்.அப்போது நடைமேடையில் சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

நேற்று துரை பாக்கம் பகுதியில் சாலையில் வீசப்பட்ட சூட்கேசில் ஏற்கனவே பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். எனினும், அதிகாரிகள் சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் கஞ்சா மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை சோதனை செய்ததில் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணையை தொடங்கிய ரயில்வே போலீசார், ரயில்வே போலீஸார் சோதனை நடத்தியதைக் கண்டு கடத்தியவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். பெரியமேடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கஞ்சாவை போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், 14 கிலோ கஞ்சாவை வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.