என்னாது..!!! தென்னாப்பிரிக்காவை அலறவிட்ட ஆப்கானிஸ்தான் அணி… குவியம் பாராட்டுக்கள்.!!
SeithiSolai Tamil September 21, 2024 06:48 PM

தென்னாப்பிரிக்கா அணியை 2-0 என வீழ்த்தி ஒடிஐ தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, உலக கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. இது ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வென்ற முதல் ஒடிஐ தொடராகும்.

மட்டுமின்றி, இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ரன்களின் அடிப்படையில் ஒடிஐ போட்டிகளில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது. இது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

இந்த வெற்றி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் திறமையையும், அவர்களின் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறது. குறைந்த காலத்தில் உலகளாவிய அளவில் ஒரு சக்திவாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, விரைவில் கிரிக்கெட்டின் முன்னணி அணிகளில் ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வெற்றி, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மிகுந்த பெருமையை சேர்த்துள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.