பிரியங்கா முதல் மணிமேகலை வரை .. விஜய் டிவி பிராடக்ட்களின் சம்பளம் தெரியுமா?
CineReporters Tamil September 21, 2024 10:48 PM

Vijaytv: விஜய் டிவி பிரச்சினை கொளுந்துவிட்டு எரியும் நிலையில், ஒவ்வொரு நாளும் புது புது தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி ஆங்கர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.�

பொதுவாக விஜய் டிவியில் சீரியல்களுக்கு கிடைக்கும் புகழை விட ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உண்டு. இதனால் கடந்த பல வருடங்களாக விஜய் டிவி நிறைய வித்தியாசமான நான் பிக்சன் நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டு வருகிறது.�

இந்த நிகழ்ச்சிகளுக்கு ஆங்கரின் பங்கு தான் முக்கியம் என்பதால் விஜய் டிவியில் தொகுப்பாளர்கள் எண்ணிக்கை அதிகம். அதிலும் ஒரு சிலருக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவு வரவேற்பு இருக்கும்.�

2000களில் இருந்து திவ்யதர்ஷினி விஜய் டிவியின் முகமாக இருந்தார். நிறைய ஆண் தொகுப்பாளர்கள் வந்தாலும் தனி பெண் தொகுப்பாளராக அவர் தான் களத்தை ஆண்டு வந்தார். அதுபோல தனித்தனி நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த பெண் தொகுப்பாளர்களும் உண்டு.

ஆனால் கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவியில் எல்லா நிகழ்ச்சிகளையும் பிரியங்கா தேஷ்பாண்டே தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வருடத்தில் இருந்து தான் மணிமேகலை, கிகி உள்ளிட்ட புதிய பெண் தொகுப்பாளினிகள் விஜய் டிவியில் கால் எடுத்து வைத்தனர்.

இந்நிலையில் தான் இந்த பிரச்சனை வெடித்து இருக்கிறது. இதற்கிடையில் இவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் குறித்த விவரங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.�

அந்த வகையில் விஜய் டிவியின் முகமாக இருக்கும் பிரியங்கா தேஷ் பாண்டேவிற்கு ஒரு எபிசோடை தொகுத்து வழங்க 2.5 லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறாராம். அதுபோல பல வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானாவிற்கு ஒரு எபிசோடை தொகுத்து வழங்க கோபிநாத்திற்கு 5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.�

அதுபோல மா கா பா ஆனந்திற்கு சம்பளமாக 2.5 இலட்சமும், குக் வித் கோமாளியை தொகுத்து வழங்கி வரும் ரக்ஷனுக்கு சம்பளமாக ஒரு லட்சமும், இந்த சீசனை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலைக்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பளமாக கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.