Vettaiyan : ``திமிரைப் பாருங்க; போகட்டும் விடுங்கன்னு சொன்னாங்க" - ரஜினி சொன்ன கதை!
Vikatan September 22, 2024 06:48 AM
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும், எந்தவொரு நிகழ்ச்சியிலும் நடிகர் ரஜினி சொல்லும் அவரின் வாழ்க்கை அனுபவக் கதைகள் ரசிகர்களின் இதயங்களை வென்றுவிடும். எதையும் சுவாரஸ்யமாகச் சொல்லும் ரஜினியின் கதை சொல்லல் பாணி, பலரையும் ஈர்த்துவிடும். அப்படி ஹிமாசலில் நடந்த கதை ஒன்றை இந்த 'வேட்டையன்' இசை வெளியீட்டு விழாவில், `ஹிமாச்சல் கழுதை பற்றிய கதையாகச் சொல்லியிருக்கிறார்.

ரஜினிகாந்த்

இது குறித்துப் பேசியிருக்கும் அவர், "இந்தப் படத்தோட இயக்குநர் ஞானவேல் என்கிட்ட ' 'புவனா ஒரு கேள்விக்குறி', 'முள்ளும் மலரும்' மாதிரி ஒரு ரஜினியை ரசிகர்கள் பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க'னு சொன்னாரு அதுக்கு நான் அவருக்கு இமாச்சல்ல நடந்த ஓர் உண்மையான கதையைச் சொன்னேன். அங்க ஒரு ஊர்ல ஒரு டோபி இருந்தார். அந்த ஊர்ல பள்ளாத்தாக்குல இருக்கிற ஆற்றில் இறங்கி துணி துவைக்கும் அந்த டோபிக்கு பொதியை சுமந்து போகுறதுக்கு ஒரு கழுதை இருந்துச்சு.

திடீர்னு ஒரு நாள் அந்த கழுதை காணமல் போயிடுது. அதுனால அந்த டோபி பழைய விஷயங்கள் எல்லாத்தையும் மறந்திட்டு ஒரு மரத்தடியில போய் உட்கார்ந்திடுறாரு. இந்த டோபி பெரிய ஞானினு நினைச்சுகிட்டு சில சிஷ்யர்கள் வந்து சேர்ந்தாங்க. இவர் சொல்றதெல்லாம் நடக்கும்னு அந்த சிஷ்யர்கள் நம்பினாங்க. இப்போ ஒரு நாள் கழுதை திரும்ப வந்துடுது. மறுபடியும் அவனுக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்து 'என் கழுதை வந்திடுச்சு'னு சொல்றாரு. அப்போதான் அவருடைய சிஷ்யர்களுக்கு 'இவர் ஒரு டோபி' என்ற விஷயம் தெரிய வருது. அப்போ அந்த டோபி கிட்ட அந்த சிஷ்யர்கள் 'எதுவும் பேசாதீங்க! நீங்க பெரிய ஞானி. இந்த வாழ்க்கை நல்லா இருக்கு'னு சொல்லி அமைதியாக இருக்கவச்சுட்டாங்க.

அந்த டோபி மாதிரிதான் நான். அந்தப் படங்களோட ஓகே இல்லாத ஃபுட்டேஜஸை ஞானவேல் பார்க்கல. ஒரு டோபி மாதிரி ஏதோ நடந்து போச்சு என்னை நல்ல ஆர்டிஸ்ட்னு சொன்னாங்க. 'தளபதி' படம் மாதிரி நடிக்க சொன்னாங்க..எப்படி...அதுனாலதான் பைரவி. போக்கிரி ராஜா, முரட்டுக்காளை படங்களை பண்ணி என்னுடைய டிராக்கை மாத்திகிட்டேன்.

ரஜினிகாந்த்

'ஆறிலிருந்து அறுபதி வரை' படத்தோட ஷுட்டிங்ல எஸ்.பி.எம் சார் எனக்கு முதல் நாளே 14 பக்கத்துக்கு வசனம் கொடுத்தார். அவ்வளவு வசனங்கள் இருக்குனு நான் பயந்து பேசமாட்டேன்னு போயிட்டேன். எல்லோரும் `திமிரைப் பாருங்க; போகட்டும் விடுங்கன்னு சொன்னாங்க. எஸ்.பி.எம் சார் என்னைக் கூப்பிட்டு, உன்னால முடிஞ்சதை பண்ணு. பேக் ஷாட், டாப் ஆங்கிள் வைத்து எடுத்துக்கிறேன்னு சொன்னார். கமலுக்கு ஸ்ரீ தேவி மாதிரி ஹீரோயின்கூட நடிக்க வச்சாங்க. அப்போ எனக்கு டிராமா நடிகர்களோட நடிக்க வச்சாங்க. அப்படி வெள்ளை தாடி வச்சு ஆறிலிருந்து அறுபது வரை படத்துல நடிச்சேன். அப்புறம் ஒரு மாதிரி நல்ல டிராக்ல போயிட்டு இருக்கு.

சினிமாவுல 50 வருஷமாகப் போகுது. ஒண்ணுமே தெரியாம ட்ரெயின் ஏறி இங்க வந்தேன்... நீங்க கொடுத்த ஆதரவுலதான் இங்க இருக்கேன். இந்தப் படம் ஞானவேலுக்காக ஹிட் ஆகணும். அவர் நம்ம சினிமாவுக்குத் தேவை." எனக் குறிப்பிட்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vettaiyan : `நெல்சன், லோகேஷ் மாதிரி இல்லாம, வேற மாதிரி பண்ணலாம்னு சொன்னாரு...' - ரஜினிகாந்த்
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.