வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அதிதீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் தலைநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழைக் கொட்டி தீர்க்கிறது.
இதன் காரணமாக மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று விழுப்புரம், சேலம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கன மழை பெய்யக்கூடும் என்பதால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 18-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.