கர்நாடக மாநிலம் தாவனகெரேவில் உள்ள புனே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 30 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலுகா குயிலால் சுங்கச்சாவடி அருகே அதிகாலை சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தபோது, பஸ்சின் முன்பகுதியில் இருந்து எதிர்பாராதவிதமாக புகை கிளம்பியது.
இதைப் பார்த்த டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார், ஆனால் அதற்குள் பேருந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து பேருந்தில் இருந்த 30 பயணிகளும் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கினர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதற்குள் பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. இச்சம்பவம் குறித்து அய்மங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.