2019ம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டி போட்டது. இதன் பாதிப்பு முழுமையாக விலக 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆனது. ஐந்தாண்டுக்கு பின், தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி வருகிறது. 'ஹியூமன் மெடாநிமோ வைரஸ்' என்ற, எச்.எம்.பி.வி., தொற்று, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதித்து வருகிறது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சீனாவில் வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. எப்.ஐ.பி., எனப்படும் பெலைன் இன்பெக்சியஸ் பெரிட்டோனிட்டிஸ் எனப்படும் இந்த தொற்று, பூனைகளிடம் இருந்து பூனைக்கு பரவுமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்படும் பூனைகள் உயிரிழக்கின்றன. உடனடி சிகிச்சை முறைகள் ஏதும் இல்லாத நிலையில், மனிதர்கள் கொரோனா தொற்றுக்கு பயன்படுத்திய மாத்திரைகளை பூனைகளுக்கு கொடுத்து வருகின்றனர்