பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.!
Seithipunal Tamil January 08, 2025 06:48 AM

கடந்த 2012-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை பாடங்களில் மாணவர்கள் நலன் கருதி நியமிக்கப்பட்டார்கள். 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டு, பின்னர் சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ₹12,500 ரூபாய் வழங்கப்படுகிறது.

பதின்மூன்று ஆண்டுகளாக பணிபுரியும்போதும், இதுவரை மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி உள்பட அரசின் சலுகைகள் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கின்றார்கள். ஆகவே, பணிநிரந்தரம் செய்தால் மட்டுமே இனி எஞ்சி உள்ள காலத்தை நல்லபடியாக வாழ முடியும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். ஆகவே, மனிதாபிமானம் கொண்டு காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் தமிழக முதல்வர் அவர்கள் செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை அனைத்து கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.