பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டுக்குள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தூதரக அதிகாரி சந்தோஷ் ஜா கூறியதாவது: இந்த பயணத்திற்கான சரியான நேரத்தை நாங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும், இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க கடந்த டிசம்பரின் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தார்.அப்போது அவர் மோடிக்கு அழைப்பை விடுத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க, கடந்த செப்டம்பரில் இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் தனது முதல் பயணமாக புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டார்.
அநுர குமார திசநாயகே அதிபராக பொறுப்பேற்றவுடன் கொழும்புக்கு பயணம் செய்த முதல் வெளிநாட்டு பிரமுகராக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருந்தார்.
இருப்பினும், பிரதமர் மோடி சுற்றுப்பயணத்துக்கான தேதிகள் இன்னும் இரு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சந்தோஷ் ஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.