தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இன்று காலை பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநரை தலைவர் அப்பாவு வரவேற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்கபட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.
அரசியல் தலைவர் கண்டனம் தெரிவிக்கும் நிலையில் ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. அதில், அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் உரைக்கும் முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்கும் வழக்கம் உள்ளது. தேசிய கீதம் மரபுப்படி இது கட்டாயமாகும். பலமுறை முன்கூட்டியே நினைவூட்டியும் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது என ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கமளித்துள்ளது.