தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட அதன் புறநகர் மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதோடு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெறுவதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..
இதனால் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று ராணிப்பேட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதோடு கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் வருகிற 18-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகிறார்கள். மழையை பொறுத்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.