உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. இரு வீட்டாரும் இணைந்து மகிழ்ச்சியோடு திருமணம் செய்து வைத்தனர். பெற்றோர் ஏற்பாட்டின் படி இந்த திருமணம் நடைபெற்ற நிலையில் முதலிரவு ஏற்பாடு நடந்தது. அப்போது மணமகனிடம் மணமகள் பீர், கஞ்சா மற்றும் மட்டன் இறைச்சி போன்றவற்றை கேட்டுள்ளார். முதலிரவுக்கு ஆசையாக சென்ற மணமகனுக்கு மணமகள் கேட்டதை பார்த்து ஒண்ணுமே புரியவில்லை.
பின்னர் தான் மணமகளுக்கு திருமணத்திற்கு முன்பே பீர் மற்றும் கஞ்சா குடிக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக மணமகன் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்துவரும் நிலையில் மணமகன் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். மேலும் திருமணமான முதலிரவிலேயே மணமகள் செய்த விஷயத்தால் விவாகரத்து வரை சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.