pa ranjith
pa ranjith
நடிகர் விஜய்: தமிழ் சினிமாவில் ஏற்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாவது ஷெட்யூல் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறப்படுகின்றது.
இதற்கிடையில் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து அரசியல் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். தளபதி 69 திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகின்றது.
கோட் திரைப்படம்:
நடிகர் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு கிட்டத்தட்ட 250 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட கேமியோ கதாபாத்திரங்கள், விஜயின் நெகட்டிவ் கதாபாத்திரம், சிவகார்த்திகேயனின் என்ட்ரி, திரிஷாவின் குத்து பாடல் என பல விஷயங்கள் இருந்தன.
இதனால் படம் ரசிகர்களால் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டது. அதன் காரணமாக இந்த திரைப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்கின்ற பெருமையை பெற்றிருக்கின்றது. இதனை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
கோட் படத்தின் விமர்சனம்:
கோட் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனங்களை தான் கொடுத்திருந்தார்கள். இருப்பினும் விமர்சனங்களை எல்லாம் தாண்டி இந்த திரைப்படம் பெரிய சாதனை படைத்தது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் எந்த வித ஹைப்பம் கொடுக்காமல் இருந்தனர் படக்குழுவினர்.
இப்படத்திற்கு இதுவே சாதகமாக அமைந்தது. லியோ அளவிற்கு எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இல்லாமல் இருந்ததும் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் மிகப்பெரிய அளவிற்கு உதவியது. பெரும்பாலான ரசிகர்கள் இந்த திரைப்படத்தை மிகவும் கொண்டாடினார்கள்.
பா ரஞ்சித் கருத்து:
சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் பல இயக்குனர்கள் கலந்து கொண்டு தங்களின் படங்கள் குறித்து பேசி இருந்தார்கள். ரவுண்ட் டேபிள் மீட்டிங்காக நடந்த இந்த நிகழ்ச்சியில் பா ரஞ்சித் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'சில படங்களுக்கு ரிவ்யூ எந்த சப்போர்ட்டும் செய்யவில்லை. தற்போது கோட் திரைப்படம் தமிழகத்தில் இந்த வருடத்தின் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற புகழை பெற்று இருக்கின்றது.
கோட் திரைப்படம் வெளியான சமயத்தில் பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. அதையும் மீறி கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றது. ரசிகர்கள் அப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வெற்றி படமாக மாற்றினார்கள். ஆனால் சில படங்களுக்கு ரிவியூஸ் வொர்க் ஆகின்றது, சில படங்களுக்கு சரியாக ஒர்க் அவுட் ஆகுவதில்லை.
நாம் எந்த கருத்தையும் முன்வைக்க போவதில்லை. ஆனால் கொடுக்கும் விமர்சனங்களை உண்மையாக சரியானதாக கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து' என்று கூறியிருக்கின்றார். வெங்கட் பிரபுவை அருகில் வைத்துக் கொண்டே கோட் திரைப்படத்திற்கு அதிக விமர்சனங்கள் வந்தது என்பதை தைரியமாக கூறினார் பா ரஞ்சித்.