ரஷ்யாவை சேர்ந்த படுலினா என்ற பெண் தொடர் சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டார். இவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது படுலினாவின் நுரையீரலில் உலோகத்தால் ஆன ஸ்பிரிங் இருந்தது தெரியவந்தது.
முதலில் அவர் நிமோனியா சளியாக இருக்கும் என நினைத்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சோதனை செய்தபோது ஸ்ப்ரிங் இருப்பது தெரியவந்தது. ரத்த உறவின் நோயால் பாதிக்கப்பட்ட போது படுலினாவின் உடலில் பொருத்தப்பட்ட குழாய்கள் ரத்த ஓட்டம் மூலம் நுரையீரலுக்குள் வந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.