சென்னை புத்தகத் திருவிழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற நிகழ்வில் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சீமான் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து தவிர்க்கப்பட்டு, புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டதற்கும் பபாசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்தும் BAPASI அமைப்பின் செயலாளர் எஸ்.கே.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அவசர செயற்குழுவை கூட்டி நிகழ்ச்சியை நடத்திய டிஸ்கவரி புக் பேலஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.கே.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.