கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுல்பர் நிஜாஸ் என்ற பெண் (34 வயது) திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனை செல்ல அவர் ஆட்டோ ஒன்றில் ஏறி இருக்கிறார். ஆட்டோவில் மருத்துவமனைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல், வாந்தி ஆகியவை ஏற்பட்டது. வாந்தி எடுக்க ஆட்டோவில் இருந்து அந்த பெண் தலையை வெளியே நீட்டி இருக்கிறார். அவசரகதியில் அப்படி தலையை வெளியில் நீட்டியபோது, ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
வழியில் வந்த எமன்இதில் அவருக்கு பயங்கர காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், அந்த பெண்ணிற்கு கொடுத்த சிகிச்சை பலனளிக்கவில்லை. அவர் மரணித்து விட்டார். இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரை காப்பாற்ற ஆட்டோவில் சென்ற பெண் செல்லும் வழியிலேயே விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
இதையும் படிங்க: