நள்ளிரவில் 2 மனைவிகளுக்கு இடையில், கணவன் செய்த பஞ்சாயத்து.. சற்று நேரத்தில் ஏற்பட்ட விபரீதம்.!
Tamilspark Tamil January 05, 2025 06:48 AM
ஒரே வீட்டில் 2 மனைவிகள்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பாஞ்சாலியம்மன் கோவில் தெருவில் திலீப் சிங் (50 வயது)என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பார்வதி (45 வயது) தனியார் நிறுவனம் ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக இருக்கின்றார். திலீப்க்கு இரண்டாவது மனைவி ஒருவர் இருந்துள்ளார்.

அடிக்கடி தகராறு

திலீப் சிங் ஒரு போதை அடிமையாளர். இதனால், அவர்களது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது மனைவியும் அவர்கள் வீட்டில் தனி அறையில் வசித்து வருவதால், பார்வதி மிகுந்த கோபத்தில் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க:

நள்ளிரவு நேரத்தில் பஞ்சாயத்து

சம்பவ தினத்தில் நல்ல மது போதையில் இருந்த திலீப் தன்னுடைய இரண்டாவது மனைவி சமைத்த உணவை நள்ளிரவு நேரத்தில் கொண்டு வந்து முதல் மனைவி பார்வதியிடம் கொடுத்து சாப்பிட சொல்லியுள்ளார். ஆனால், அவர் சாப்பிடவில்லை. தொடர்ந்து பார்வதியை அவர் வற்புறுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது.

கொலை முயற்சி

அப்போது கல் மற்றும் கத்தியை கொண்டு பார்வதியை திலீப் சிங் தாக்கியுள்ளார். இதில், பார்வதி நிலைமை மோசமடைய அவர் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, சிகிச்சை பெற்று வரும் பார்வதி போலீசில் புகார் கொடுத்த நிலையில், அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.