பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் மற்றும் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
2023-2024-ம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு ரூ.163.81 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதில், 'சி' மற்றும் 'டி' பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.03 ஆயிரம் என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து அதேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:- தமிழக அரசின் பொங்கல் போனஸ் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் கிடைக்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.
2012-ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்களுக்குக் கடந்த 12 ஆண்டுகளாக பொங்கல் போனஸ் வழங்கப்படாமல் இருப்பதை தேமுதிக கண்டிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த முறையாவது அவர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கத் தமிழக முதல்வரை தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன். என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.