கூகுள் சுந்தர் பிச்சையின் 2025 புத்தாண்டு வாழ்த்தை ஏற்றுக்கொண்ட Elon Musk.. ஒருவேள இருக்குமோ!
ET Tamil January 02, 2025 09:48 PM
கூகுளின் ஜிமெயிலுக்கு எதிராக் எலான் மஸ்க் எக்ஸ் மெயிலை வெளியிடப்போவதாக சென்ற மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில் கூகுள் சுந்தர் பிச்சைக்கும், எலான் மஸ்கிற்கும் இடையே ஒரு பனிப் போராட்டம் இருந்து வந்த நிலையில், இருவரும் சமீபகாலமாக அடிக்கடி எக்ஸ் தளத்தில் கருத்துக்களை ஆதரித்து வருகின்றன.இதற்கிடையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை 2025 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு வாழ்த்தை எலான் மஸ்கிற்கு தெரிவித்துள்ளார். அதற்கு மஸ்கும் அதனை மறுபதிவு செய்து வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.சுந்தர் பிச்சையின் பதிவிற்கு எலோன் மஸ்க் பதிலளிப்பது ஒரு மாதத்திற்குள் இது இரண்டாவது முறையாகும். கடந்த மாதம், கூகுள் சிஇஓ, ஒரு பெரிய கிரிக்கெட் ரசிகன், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் செயல்திறனைப் பாராட்டினார். பும்ராவின் பேட்டிங் சாதனையை கூகுளில் பார்த்ததாகவும், பாட் கம்மின்ஸை சிக்ஸருக்கு ஹூக் செய்யும் அவரது திறனைப் பாராட்டியதாகவும் பிச்சை எழுதினார். தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்தியாவை ஃபாலோ-ஆனில் இருந்து காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றிய பும்ராவின் சமீபத்திய பேட்டிங் பார்ட்னர்ஷிப்புக்காக பும்ராவை அவர் பாராட்டினார். இந்த உரையாடலில் மஸ்கும் இணைந்து “Good" எனக் கமெண்ட் செய்துள்ளார்.இப்படி இருவரும் பரஸ்பரம் காட்டி வருவது ஏதேனும் புதிய திட்டத்திற்காக இருக்குமா அல்லது நட்பு ரீதியாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. இது நமக்குமே என்னவா இருக்கும் மனநிலையைத்தான் தருகிறது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.