சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வார எபிசோடுகள் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்தது. ரோகிணி மனோஜ் வாங்கிய வீடு விஷயம், ஜீவா மனோஜுக்கு பணம் திருப்பிக் கொடுத்த விவகாரம் என இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தது.
ஒவ்வொரு முறையும் ரோகிணி தான் செய்த தவறுக்கு வருந்தாமல், தன் அம்மாவை குறை சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். `உன்னால தான் என் வாழ்க்கை இப்படி இருக்கு’ என்று ஒவ்வொருமுறையும் சொல்லிக் காட்டுகிறார்.
ரோகிணி சொல்வதும் சரி தான் என்பது போல் சில சமயம் ரசிகர்கள் கருதுகின்றனர். ரோகிணி இதையெல்லாம் ஏன் செய்கிறார். பணத்துக்காகவோ, அல்லது மற்றவருக்கு கெடுதல் நினைப்பதற்காகவோ இல்லை. தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தில் செய்கிறார்.
Siragadikka aasaiரோகிணியின் பக்கம் தவறு இருந்தாலும், அவர் பக்கம் கொஞ்சமேனும் நியாயம் உள்ளதாகவே அந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தையும் பணத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கும் விஜயா தான் மிகவும் ஆபத்தானவர்.
தன் கணவரை சாதாரண டிரைவர் என்று அடிக்கடி குத்திக்காட்டுவது, முத்துவை கார் டிரைவர் என மட்டம்தட்டுவது. அடிக்கடி மீனாவை குறை சொல்வது. ஸ்ருதி, ரோகிணியை பணக்காரர்கள் என்பதால் கொண்டாடுவது என விஜயா பணத்திற்கு மட்டுமெ முக்கியத்துவம் கொடுக்கிறார்.
Siragadikka aasaiசமீபத்திய ப்ரோமோவில் ரோகிணியை விஜயா மிகவும் மோசமாக நடத்துகிறார். அறையில் கதவை சாத்தக் கூடாது, மனோஜும் ரோகிணியும் ஒன்றாக இருக்கக் கூடாது, அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக் கூடாது போன்ற கட்டளைகளை பிறப்பிக்கிறார்.
அனைத்து கொடுமைகளுக்கும் உச்சமாக சாப்பிட அமரும் ரோகிணியை `எழுந்திரு’ என்று மிரட்டுகிறார். ரவி விஜயாவை கடிந்து கொள்கிறார். ஏன்மா இப்படி பண்றீங்க, நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க அண்ணி என்று ரவி சொல்ல, ரோகிணி அத்தை சொல்வதை தான் கேட்பேன் என்று கொஞ்சமும் சுயமரியாதை இன்றி பேசுகிறார்.
மனோஜ் ரோகிணியிடம் பேசக் கூட விஜயாவிடம் பெர்மிஷன் கேட்டு தான் செய்கிறார். போகிறப்போக்கை பார்த்தால் ரோகிணி வீட்டில் தனிமைப்படுத்தவார் என்றே தோன்றுகிறது.
எதிர்நீச்சல்எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் தொடங்கிவிட்டது. முதல் பாகத்தில் இருந்த அதே கதை தான். குடும்பத்தினர் அடிக்கடி தங்களுக்குள்ளாக வாக்குவாதம் செய்து கொள்கின்றனர். ஈஸ்வரி வீட்டில் இல்லை. நந்தினி பிஸ்னஸ் செய்கிறார். நந்தினியின் கணவர் கதிர், குணசேகர் மகன் தர்ஷன், ஞானம் திருந்திவிட்டது போல் முதல் பாகம் முடிந்தது.
ஆனால் இந்த பாகத்தில் மூவரும் மீண்டும் மோசமாக நடந்து கொள்கின்றனர். அதற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று அவர்கள் மூவரும் நியாப்படுத்துகின்றனர். குணசேகரன் சிறையில் இருக்கிறார், அதை பற்றி கவலைப்படாமல் ஈஸ்வரி விட்டை விட்டு வெளியேறியது தான் இவர்களின் கோவத்துக்காக காரணம் என்கின்றனர்.
Ethirneechalஈஸ்வரியின் மாமியார் விசாலாட்சி அவரை வீட்டிற்கு அழைக்கிறார். அவரும் வர சம்மதிக்கிறார். சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கதிர் ஈஸ்வரியைப் பற்றி தவறாகப் பேசுவதை கேட்டு சக்தி கோபப்பட்டு அவரை அறைகிறார்.
மற்றொருபுறம் ஈஸ்வரியின் மகன் தர்ஷனே தன் அம்மாவை பற்றி தவறாகப் பேசுகிறார். ‘அம்மா தனியா போய் அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழ்ந்தா தப்பில்ல, ஆனா அவங்க ஜீவானந்தம் கூட இருக்குறது தான் பிரச்னை” என்று தவறாகப் பேசுகிறார். நந்தினி, ஜனனி ஈஸ்வரிக்கு ஆதரவாக அனைவரிடமும் வாக்குவாதம் செய்கின்றனர்.
விசாலாட்சி ஈஸ்வரியிடம் என் கூடவே இரு என்று கேட்க ஈஸ்வரியும் சம்மதிக்கிறார். ஆனால் ஆதிரைக்கு இது பிடிக்கவில்லை. அவர் இந்த பாகத்தில் மீண்டும் அண்ணிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது போல் தெரிகிறது.
ஈஸ்வரி தன் மகள் தர்ஷினி உடன் ஜீவானந்தத்துடன் பயணிப்பது ஏன்? அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம் என்ன என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரிய வரும்.