திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவியில் மணிகண்டன் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் சட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்தார். இவர் நேற்று காலை பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் கமிட்டி நடுநிலைப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது ஒருவர் வழிமறித்தார். பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வாலிபரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
இவரை உறவினர்கள் மீது அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்த நிலையில் மாயாண்டி என்பவர் வாலிபரை குத்தியது தெரியவந்தது. மேலும் முன்னதாக நெல்லையில் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக ஒரு வழக்கில் ஆஜராக வந்த மாயாண்டி என்பவரை மர்மகும்பல் சிலர் வெட்டி படுகொலை செய்த நிலையில் சட்ட கல்லூரி மாணவர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒரே நாளில் 2 பேர் முன் விரோதம் காரணமாக நெல்லையில் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.