தங்கம் விலை கடந்து சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 360 உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறி பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,140 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 360 உயர்ந்து ரூபாய் 57,120 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,595 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,760 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva