நேற்று போலவே இன்றும் பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!
WEBDUNIA TAMIL October 16, 2024 02:48 PM


இந்திய பங்குச் சந்தை நேற்று ஆரம்பத்தில் ஏற்றத்தில் இருந்தாலும், அதன் பிறகு திடீரென பங்குச் சந்தை சரிந்தது என்பதும், பங்குச் சந்தை வர்த்தகத்தின் இறுதியில் சுமார் 100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று போலவே இன்றும் பங்குச் சந்தை சரிவுடன் ஆரம்பித்துள்ளது. சற்று முன் மும்பை பங்குச் சந்தை 70 புள்ளிகள் குறைந்து 81, 730 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்கு சந்தை 12 புள்ளிகள் குறைந்து 25,040 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

பங்குச் சந்தை மிகவும் குறைவான சரிவில் இருப்பதால், மதியத்திற்கு மேல் பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், புதிதாக முதலீடு செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் ஆலோசனை பெற்றுக்கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வாங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.


Edited by Siva
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.