“மனசாட்சியே இல்லாத திட்டம்”… காசாவுக்கு பேரழிவு… மக்களை பட்டினி போட திட்டம்… இஸ்ரேல் கொடூர முடிவு…!!!
SeithiSolai Tamil October 16, 2024 03:48 PM

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்- பாலஸ்தீனிய போராளிகளுக்கு இடையே ஆரம்பித்த போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்களை இஸ்ரேல் கொன்றது. இருப்பினும் ஹமாஸ் அமைப்பினை பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேலால் அளிக்க முடியவில்லை. காசா- இஸ்ரேல் எல்லையில் ஆரம்பித்த இந்தப் போர் ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. காசா நகரின் முக்கிய வேறாக கலந்த ஹமாஸ் சுரங்கப்பாதை அமைப்பு, போர்யுக்திகள் ஆகியவை இஸ்ரேலுக்கு சவாலாக அமைந்து வருகிறது.

இந்த காரணத்திற்காகவே இஸ்ரேல் பொதுமக்கள் வேறு, ஹமாஸ் அமைப்பினர் வேறு என பிரித்துப் பார்க்காமல் பார்ப்போர் அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களால் காசாவில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் போதிய உணவு, அடிப்படை சுகாதார வசதி இன்றி தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் முக்கிய தலைவர் ஜியோரா எய்லான்ட் மற்றும் முக்கிய ஜெனரல்கள் உள்ளிட்டோர் இந்த திட்டத்திற்கு முக்கிய மூளையாக செயல்பட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு “ஜெனெரல்ஸ்” திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தினை இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி, காசா பகுதியில் உணவு மற்றும் அடிப்படை சுகாதார வசதி, தண்ணீர், தேவையான அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை அனுப்பாமல் அங்குள்ளவர்களை பட்டினி போடுவது ஆகும். இத்திட்டத்தின்படி இஸ்ரேல் காசாவுக்கு இரண்டு வழிமுறைகளை முன்மொழிந்துள்ளது, வடக்கு காசா மக்கள் அங்கிருந்து முழுவதுமாக பத்து நாட்களுக்குள் வெளியேற வேண்டும். இல்லையெனில் எந்த அடிப்படை வசதியும் இன்றி அங்கேயே பட்டினியாக இறக்க வேண்டும். இந்த விதிமுறையை மீறி அங்கு இருப்பவர்கள் ஹமாஸ் அமைப்பினை சார்ந்தவர்கள் என கருதப்படுவார்கள். அவர்கள் மீது சட்டப்படி எந்த வித தாக்குதலும் இஸ்ரேல் மேற்கொள்ளும்.

இதனால் காசாவில் உள்ள மக்கள் இந்த இரண்டு வழியில் ஒன்றை தான் தேர்வு செய்ய முடியும். இந்தத் திட்டம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு தீவிரமாக செயல்படுகிறது. ஏற்கனவே காசா மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் காசாவில் உள்ள அனைத்து மக்களும் பேரழிவை சந்திப்பர். இதுகுறித்து சமூக சர்வதேச அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளது முக்கியமானதாகும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.