டைம்ஸ் ஸ்கொயர் திரையில் 'அமரன்'..!
Newstm Tamil October 21, 2024 02:48 AM

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.

'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் அமரன் படத்தின் விளம்பரத்திற்காக நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் திரையில் அமரன் படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த திரையில் திரையிடப்படும் முதல் தென்னிந்திய திரைப்படமாக இப்படம் உள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.