வாகன ஓட்டிகளே இந்தப் பக்கம் போகாதீங்க... நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!
Dinamaalai October 21, 2024 04:48 AM

 சென்னையில் நாளை அக்டோபர் 21ம் தேதி திங்கட்கிழமை காவலர்  நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுகிறது. இதனையடுத்து நாளை சென்னையின் முக்கியப் பகுதிகளில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது. இதனையொட்டி  நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை நினைவு நாள் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதனையடுத்து  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.


சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் காரனீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரனீஸ்வரர் பக்கோடா தெரு- அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம், எதிர் திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. 
காந்தி சிலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது, காவலரின் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நேரத்தில் மாற்று வழியாக அந்த வாகனங்கள் லைட் ஹவுஸ் MRTS சாலை வழியாக சென்று லாயிட்ஸ் சாலை - காமராஜர் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.  
மயிலாப்பூரில் இருந்து பாரிஸ் நோக்கி வரும் மாநகரப் பேருந்து(21G) ராயப்பேட்டை 1 பாயின்ட் - மியூசிக் அகாதெமி பாயின்ட் - TTK சாலை - இந்தியன் வங்கி Jn - ராயப்பேட்டை நெடுஞ்சாலை - GRH பாயின்ட் - அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். 


கதீட்ரல் ரோடு லைட் ஹைவுஸ் நோக்கி வரும் மாநகரப் பேருந்து (27 D) V.M. தெருவில் திருப்பிவிடப்பட்டு - லஸ் சந்திப்பு - லஸ் சர்ச் சாலை - D' ஸ்லிவா சாலை - பக்தவச்சலம் சாலை - Dr. ரங்கா சாலை - பீமனா கார்டன் jn - CP ராமசாமி சாலை - சீனிவாசன் தெரு - RK மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். 
காமராஜர் சாலை (நேப்பியர் பாலம் முதல் லைட் ஹவுஸ்) வரும் அனைத்து வர்த்தக மற்றும் கனரக வாகனங்களும் செல்லத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.