“இந்தப் பெண்ணின் நிலைமையை பாருங்க”..? அந்த நாளில் 5 நாட்களும் வீட்டுக்கு வெளியே தான்… போட்டோவை காட்டி சுப்ரீம் கோர்ட் நீதிபதி வேதனை…!!
SeithiSolai Tamil October 21, 2024 04:48 AM

கோவா மாநிலத்தில் உள்ள பானாஜி பகுதியில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட பல்வேறு நீதிபதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோர் நாட்டில் நடக்கும் ஒரு ஒரு மோசமான சம்பவம் குறித்து வருத்தமான கருத்தை பதிவிட்டார். இதுகுறித்து அவர் கூறும் போது, முதலில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டினார். அதன் பிறகு இந்த போட்டோவை கடந்த வருடம் நான் ஒரு தொலைதூர கிராமத்தில் எடுத்தேன். அதாவது மாதவிடாய் காலத்தின் போது ஒரு 5 நாட்களாக வீட்டிற்கு வெளியே அமர வைக்கப்பட்டுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் எப்போதாவது கிராமப்புறங்களை பற்றி யோசித்து உள்ளீர்களா. நீங்கள் அவர்கள் மொழியை பேசி உள்ளீர்களா. நீங்கள் அவர்களை அணுகி உள்ளீர்களா. அவர்களைப் புரிந்து கொண்டீர்களா. இந்தியா என்பது டெல்லி மற்றும் மும்பை மட்டும் கிடையாது. நாம் இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலர்கள். எனவே இந்தியாவின் கடைக்கோடியில் வசிக்கக்கூடிய நீதி கிடைக்காத ஒருவரை அல்லது நீதி என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரை சந்திக்க வேண்டும். மேலும் அவர்களுடைய மொழியில் பேசி சட்டம் என்றால் என்ன என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று கூறினார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.