Breaking: தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரே நாளில் புதிய உச்சம்…. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!
SeithiSolai Tamil October 21, 2024 05:48 PM

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 58,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 7755 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 62,040 ரூபாயாகவும் இருக்கிறது. இதே போன்று வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 109 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 109000 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி மற்றும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் ஆபரண தங்கத்தின் விலை 58 ஆயிரத்தை கடந்த விற்பனையாவது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.