பாஜக_வில் இருந்து விலகி அதிமுக_வில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு
செல்வகுமார் October 21, 2024 06:14 PM

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு, அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை , அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்த கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இதையடுத்து, பாஜகவுடனான முரண்பாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் , நடிகை கௌதமிக்கு, அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பும், தடா து. பெரியசாமிக்கு எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.