16 குழந்தைகளை பெறுவதில் என்ன தவறு…? 31 ஜோடிகள் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!!!
SeithiSolai Tamil October 22, 2024 12:48 AM

ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதாவது தென்னிந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அனைவரும் குழந்தைகளை அதிகமாக பெற்றெடுக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் அதிக குழந்தைகளை பெற்றெடுப்பது குறித்து பேசி உள்ளார். அதாவது இன்று சென்னை திருவான்மியூரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சீர்வரிசைகளும் வழங்கினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் 16 செல்வங்களைப் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று அந்த காலத்தில் வாழ்த்துவார்கள்.

ஆனால் இப்போது அளவோடு பெற்று வளமாக வாழுங்கள் என்கிறார்கள். இருப்பினும் மக்கள் தொகை குறைவதை பார்க்கும் பொழுது ஏன் அளவோடு பெற வேண்டும் என்று தோன்றுகிறது. 16 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான் தோன்றுகிறது என்று கூறினார். முன்னதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசும்போது 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றவர்களுக்கு மட்டும்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். மேலும் இரு முதல்வர்களும் வெவ்வேறு நோக்கத்தில் பேசினாலும் அவர்கள் சொல்ல வருவது ஒரே கருத்து தான். அதாவது மக்கள் தொகை குறைந்து வருவதால் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த கருத்துகள் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.