தியேட்டரில் 1000 நாட்களை கடந்து தொடர்ந்து ஓடும் சிம்பு திரைப்படம்!
Newstm Tamil October 22, 2024 09:48 AM

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலர் தினத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் அந்த திரைப்படம் தற்போது ஆயிரம் நாட்களை கடந்து இன்னும் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.அதுவும் ரீ ரிலிஸ் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். காதல், ரொமான்ஸ் படமாக வெளியான இந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

சிம்புவின் ஹிட் லிஸ்டில் இந்த படமும் சேர்ந்தது. படம் வெளியான சமயத்திலேயே இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்த படம் வேறு எந்த படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது. அதாவது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் இந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளை கடந்து அதாவது 1000 நாட்களை கடந்து இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னை வி ஆர் மாலில் உள்ள PVR சினிமாவில் தான் இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது 1000 நாட்களை கடந்து இந்த திரைப்படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு படம் இத்தகையை சாதனையை செய்வது முதல்முறை. அதனை சிம்புவின் படம் செய்து காட்டியுள்ளது.
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.