BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
மாய நிலா October 22, 2024 06:14 PM

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தன்னுடைய சின்னத்தின் வண்ணத்தை மாற்றி அமைத்துள்ளது. கூடுதலாக, பாதுகாப்பாகவும், மலிவாகவும், நம்பகத்தன்மையுடனும் என்ற வாசகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அதேபோல Connecting India என்னும் வாசகம் Connecting Bharat என்று மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் 7 புதிய முன்னெடுப்புகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதை மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, மத்திய இணை அமைச்சர், துறை செயலாளர் உள்ளிட்டோர் இணைந்து திறந்து வைத்தனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.