A R Rahman : ஹனிமூன் போட இடத்தில் செய்யும் வேலையா...இசைப்புயல் ரஹ்மான் பற்றிய ரகசியத்தை உடைத்த மைத்துனன்
ராகேஷ் தாரா October 22, 2024 08:14 PM

ஏ.ஆர் ரஹ்மான்

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இசைத் துறையையில் புதுமைகளை நிகழ்த்தி  வருகிறார் ஏ.ஆர் ரஹ்மான். இசையில் தொழில்நுட்பரீதியான புதுமை , கர்னாடக , இந்துஸ்தானி, ஜாஸ், வெஸ்டர்ன் , நாட்டுப்புற இசை என அவர் தொடாத இசை வகைமைகளே கிடையாது. ஃபிலிம்ஃபேர் முதல் ஆஸ்கர் வரை எல்லா விருதுகளையும் பாக்கெட்டிற்குள் போட்டுவிட்டார். தற்போது அடுத்த தலைமுறை இசையில் பல புதிய சாத்தியங்களை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ரஹ்மானுக்கு இசை மீது இருக்கும் தீரா காதலை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்திய இசையை உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற குறிக்கோளை லட்சியமாக எடுத்துக்கொண்டு அதற்காக கடினமாக உழைத்திருக்கிறார். ரஹ்மானின் இசை ஆர்வம் பற்றி அவரது மைத்துனனன் நடிகர் ரஹ்மான் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹனிமூனில் ரஹ்மான் என்ன செய்தார்

நடிகர் ரஹ்மானின் தங்கையை தான் ஏ.ஆர் ரஹ்மான் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஹ்மான் இப்படி கூறினார் " திருமணம் முடிந்து ரஹ்மான் ஹனிமூன் சென்றிருந்தார். அப்போது நள்ளிரவு ஒரு 12 மணி இருக்கும். நான் என் தங்கைக்கு ஃபோன் செய்தேன். தூக்கத்தில் இருந்த தங்கையிடம் ரஹ்மான் என்ன செய்கிறார் என்று கேட்டபோது அவர் பக்கது அறையில் வீணை வாசித்து இசையமைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். அவர் அந்த மாதிரியான ஒரு மனிதர் தான். அவருக்கும் எனக்கு வட துருவத்திற்கு தென் துருவத்திற்குமான அளவு வித்தியாசம் இருக்கும். மற்றவர்களை பற்றிய கிசுகிசுக்களைப்  பேச அவர் விரும்பமாட்டார். எப்போது தனியாக இருக்கவே விரும்புவார். அதே நேரத்தில் அவர் ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அதே நேரத்தில் நான் அவருக்கு நேரெதிரானவன். எனக்கு நிறைய பேச பிடிக்கும்' என நடிகர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

ரஹ்மான் தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் , சூர்யா நடிக்கும் சூர்யா 48 மற்றும் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை  ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.