பிரியங்கா காந்திக்கு ரூ.12 கோடி சொத்து- வேட்புமனுவில் தகவல்
Top Tamil News October 24, 2024 04:48 AM

2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரே பரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.  இதில் ஏதேனும் ஒரு தொகுதியை அவர் கைவிட வேண்டிய சூழல் உருவானதை அடுத்து,  ஜூன் 17 அன்று ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். 

இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்  பிரியங்கா காந்தி வதேராவை  வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ்.  இதனையடுத்து இன்று பிரியங்கா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.12 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரியங்கா கணவர் ராபர்ட் வத்ராவின் சொத்து மதிப்பு ரூ.66 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியங்காவுக்கு எதிராக 3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.