பாஜகவில் 27 லட்சம் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்- தமிழிசை தகவல்
Seithipunal Tamil October 24, 2024 07:48 PM

சென்னையில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பல முக்கியமான கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

பாஜகவில் சிறுபான்மையினர் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதுவரை 27 லட்சம் சிறுபான்மையினர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவும், இதனால் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.

அதோடு, தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த தமிழிசை, நீர் மேலாண்மையில் அரசு தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டினார். அதிக மழை பெற்றாலும், சரியான மேலாண்மை இல்லாததால், நீர்நிலைகள் வறண்டு விட்டதாகவும், நீர் சேமிப்பை கடலுக்கே விட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், திமுகவின் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட பிணக்குகளை விளக்கினார். 2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, திமுக 10% வாக்குகளை இழந்துள்ளதாக கூறிய அவர், திமுக கட்சிக்குள்ளேயே குழப்பம் நிலவுவதாகவும், ஆளுநர் ராஜகண்ணப்பன் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

நடிகர் விஜய் கூட்டம் குறித்தும் அவர் பேசினார். விஜய்யின் மாநாட்டிற்கு இடம் வழங்காத அரசின் நடவடிக்கைகள் விஜய்யின் வரவால் அரசுக்கு ஏற்பட்ட பயம் என விமர்சித்தார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.