பங்குச்சந்தை இன்று 4வது நாளாக சரிவு.. முதலீட்டாளர்கள் சோகம்..!
Webdunia Tamil October 24, 2024 07:48 PM



இந்த வாரம் முழுவதும் அதாவது திங்கள் முதல் புதன் வரை பங்குச்சந்தை சரிந்த நிலையில், இன்று நான்காவது நாளாகவும் பங்குச்சந்தை சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் சோகமடைந்துள்ளனர்.

இந்திய பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இந்த வாரம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு சோதனை என்பது போல் தொடர்ந்து சரிந்து வருவதும், ஏராளமான நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதும் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை தொடக்கத்தில் ஏற்றத்தில் இருந்தாலும், தற்போது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 90 புள்ளிகள் சரிந்து 79,994 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் நிப்டி 36 புள்ளிகள் சரிந்து 24,400 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பங்குச்சந்தை இன்று ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்பதால் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய பங்குச் சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் அதிகரித்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.