தமிழகத்தில் நாளை எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.. விடுமுறை அளிக்கப்படுமா?
WEBDUNIA TAMIL October 25, 2024 05:48 AM

வளிமண்டல சுழற்சி காரணமாக நாளை 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று இரவு தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 26ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், அக்டோபர் 27ஆம் தேதி தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய வங்க கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.