79,280 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்;இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!
ஜான்சி ராணி October 25, 2024 07:44 PM

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 769.69 அல்லது 0.097% புள்ளிகள் சரிந்து 79,297.07 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 284.20 அல்லது 1.16% புள்ளிகள் சரிந்து 24,115.20 ஆகவும் வர்த்தகமாகியது. 

வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை சரிவுடன் இருந்தது.

உலக அளவில் சந்தை பொருளாதாரத்தில் நிலவும் நிலையின்மையால் இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகிவருகிறது. கடந்த ஒருவாரமாக பங்குச்சந்தை இதே நிலைதான். அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய ஈக்விட்டி சந்தையில் உள்ள பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம், அமெரிக்க தேர்தலில் நிலவும் அசாதாரண நிலை ஆகிய காரணங்களால் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. 

சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு 79 ஆயிரம் புள்ளிகளுக்கு சரிந்துள்ளது.

2024-2025 ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு பொருளாதார முடிவுகள் வெளியாகியுள்ளன. பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு செயல்பாடுகள் சொல்லும்படி இல்லை. நஷ்டத்தை சந்தித்துள்ளது. 

Foreign institutional investors (FIIs) தொடர்ந்து 19 செசனாக இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ,98,085 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 ஐ.டி.சி., ஹெச்யு.எல், சன் ஃபார்மா, நெஸ்லே, பிரிட்டானியா, ஏசியன் பெயிண்ட்ஸ்,ம் ஆக்சிஸ் வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, டி.சி.எஸ். ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 

இந்தஸ்லேண்ட் வங்கி, அதானி எண்டர்பிரைசிஸ்,, செரிராம் ஃபினான்ஸ், எம்&எம், பி.பி.சி.எல்., என்.டி.பி.சி., ஹீரோ மோட்டர்கார்ப், பாரத் எலக்ட்ரானிக்ஸ், லார்சன், கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, டைடன் கம்பெனி, டாடா மோட்டர்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹிண்டால்கோ, ஈச்சர் மோட்டர்ஸ், க்ரேசியம், டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, எஸ்.பி.ஐ., ஜெ.எஸ்.டபுள்யு., ஓ.என்.ஜி.சி.,ம் டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், பவர்கிரிட் கார்ப்ரேசன், டெக் மஹிந்திரா, விப்ரோ, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், பாரதி எர்டெல், ரிலையன்ஸ், சிப்ளா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, இன்போசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.சி.எல். டெக்  ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.


© Copyright @2024 LIDEA. All Rights Reserved.