Bigg Boss Tamil Season 8 Day 19: நாமினேஷன் Free Pass ஐ தட்டி தூக்கிய பெண்கள் அணி… சிறப்பாக நடந்த அமரன் கலந்துரையாடல்!
Tamil Minutes October 26, 2024 01:48 PM

Bigg Boss Tamil Season 8 Day 19 இல் இறுதியாக நாமினேஷன் பிரீ டாஸ்க் நடைபெற்றது. நூலில் பந்தை கொண்டு வந்து கரெக்டா கொடுக்கப்பட்டிருக்கும் பாக்ஸில் விழா செய்ய வேண்டும். இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டு பெண்கள் அணி நாமினேஷன் பிரீ பாசை அசால்டாக தட்டி சென்றனர்.

அதற்கு அடுத்ததாக பெண்கள் அணியில் நாமினேஷன் பிரீ பாசை யாருக்கு கொடுக்க வேண்டும் யாரை இந்த வாரம் சேவ் செய்ய வேண்டும் என்ற கலந்துரையாடல் நடக்கிறது. இறுதியில் பெண்கள் அணியை தேர்ந்தெடுத்து நாமினேஷனில் இருந்து பவித்ராவை சேவ் செய்தனர். இதை சொல்லி முடித்த பிறகு சௌந்தர்யா மிகவும் எமோஷன் ஆகி அழுகிறார். நான் டீமுக்காக எதுவும் செய்யவில்லையா ஒருதலைப் பட்சமாக செயல்படுவது போல் இருக்கிறது என்று ஜெபிரியிடம் கூறி அழுகிறார்.

அதற்கு அடுத்ததாக இந்த வாரம் சிறப்பாக பங்கேற்றவர்கள் யார் என்ற டாஸ்க் நடைபெறுகிறது. அதில் ஆனந்தியும் முத்துக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த வார தலைவர் போட்டிக்கு போட்டியிட இருக்கின்றனர். அடுத்ததாக பிக் பாஸ் இன்று வீட்டுக்கு ஸ்பெஷல் கெஸ்ட் வருவதாகவும் அதனால் முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கூறினார்.

நேத்து புரோமோவில் பார்த்தது போல் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்பட பரமோசனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். வரும்போது ஆரவாரமாக இருந்தது. ஹவுஸ் மேட்ஸ் உடன் நன்றாக கலந்துரையாடி அவர்கள் கொடுத்த இனிப்புகளை எல்லாம் சாப்பிட்டு பேசிக் கொண்டிருந்தார்.

அடுத்ததாக கார்டன் ஏரியாவில் அமரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதை பார்த்த ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் மிகவும் நல்லா இருந்தது மெய்சிலிக்கும்படி இருந்தது என்று பாராட்டினார்கள் வாழ்த்தினார்கள்.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பட அனுபவங்களை பற்றியும் பகிர்ந்தார். இறுதியாக கேக் வெட்டி திரைப்படத்திற்காக கொண்டாடி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் வழக்கம்போல ஹவுஸ் மேட்ஸ் கிசுகிசுவாக பேசிக் கொண்டிருந்தனர். இனி நாளை வார இறுதி எபிசோட். இந்த வாரம் விஜய் சேதுபதி எப்படி பேசுவார் என்பதை காண ஆவலாகத்தான் இருக்கிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.