Breaking: தவெக முதல் மாநாடு… விக்கிரவாண்டிக்கு விஜய் சர்ப்ரைஸ் விசிட்…. நேரில் ஆய்வு..!!!
SeithiSolai Tamil October 27, 2024 05:48 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு விசாலை என்ற இடத்தில் நாளை மாலை 4 மணிக்கு தொடங்கும் நிலையில் மாநாட்டுக்கான இறுதி கட்ட பணிகள் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் மாநாட்டை உற்று நோக்கி கவனித்து வருகிறது. இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதில் வைக்கப்பட்டுள்ள கட்டவுட் மற்றும் பேனர்கள் போன்றவைகள் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

நாளை நடைபெறும் மாநாட்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று கூறப்படும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் முக்கிய புள்ளிகள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறும் நிலையில் இன்றைய விக்கிரவாண்டிக்கு நடிகர் விஜய் செல்வார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் விக்கிரவாண்டிக்கு சென்று விட்டார். மேலும் அங்கு நடைபெறும் பணிகள் குறித்து விஜய் கேட்டறிந்து வருகிறார். இன்று இரவே விஜய் மாநாடு நடைபெறும் திடலுக்கு சென்றுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிட்டதட்ட 2 மணி நேரமாக மாநாட்டு திடலில் நடைபெறும் இறுதிக்கட்ட பணிகளை விஜய் கேட்டறிந்து நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.