TVK Vijay : தடதடக்கும் ஏற்பாடுகள்; எகிறும் எதிர்பார்ப்பு... தவெக முதல் மாநாடு Live Updates!
Vikatan October 27, 2024 06:48 AM
TVK Vijay : தடதடக்கும் ஏற்பாடுகள்; எகிறும் எதிர்பார்ப்பு... தவெக முதல் மாநாடு

கடந்த பிப்ரவரி மாதம் கட்சி குறித்தான அறிவிப்பை வெளியிட்டு நடிகர் விஜய், `தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் பிறகு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றதும் கட்சியின் கொடி, பாடல் என ஒவ்வொன்றாக வெளியிட்டது த.வெ.க.

அதைத் தொடர்ந்து, `கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடைபெறவிருக்கிறது. அது குறித்து அறிவிப்பு வெளியாகும். அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கப்படும்' என்று அறிவித்து, அரசியல் களத்தில் `த.வெ.க மாநாடு' என்பதைப் பேசுபொருளாக்கினார் விஜய்.

ஆனால், மழை... காவல்துறை - தவெக இடையேயான நோட்டீஸ் விளக்கக் கடித பரிமாற்றம் ஆகியவற்றால்... மாநாடு தேதி அறிவிப்பதில் சிறு தாமதம் ஏற்பட்டது. பின்னர், `27-ம் தேதி விக்கிரவாண்டியில் தவெக-வின் முதல் கொள்கை மாநாடு நடைபெறும்' என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. தவெக-வினரும் உடனடியாக விறுவிறு பணிகளைத் தொடங்கினர். நாளை (27-ம் தேதி) திட்டமிட்டபடி தவெக-வின் முதல் மாநாடு நடைபெறவிருக்கிறது.

தா.வெ.க மாநாடு

உணவு, தண்ணீர், இருக்கைகள் என அடிப்படையான வசதிகளை ஏற்படுத்தி, மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடிக்க தவெக-வினர் அதீத கவனம் செலுத்தி, இரவு பகலாகப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

விஜய் அரசியல் தலைவராகப் பரிணமித்துத் தலைமையேற்று நடத்தும் இந்த முதல் மாநாடு குறித்த எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எகிறியிருக்கிறது.

த.வெ.க மாநாடு குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள விகடன்.காம் உடன் இணைந்திருங்கள்...!
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.