வைரல் வீடியோ... ரம்யா பாண்டியனுக்கு யோகா மாஸ்டருடன் திருமணம்!
Dinamaalai October 28, 2024 03:48 PM

 தமிழ் திரையுலகில் ‘டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை  ரம்யா பாண்டியன்.  2016ல் ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரம்யாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படம் அவார்டுகளையும் அள்ளிக் குவித்தது.  அடுத்ததாக சமுத்திரக்கனியுடன் இணைந்து ஆண் தேவதை படத்தில் நடித்தார். ஆனாலும்   ரம்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஒன்றும் அமையவில்லை.  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார்.  


பிக் பாஸ் போட்டியில் இறுதிவரை தாக்குப்பிடித்து ரம்யா 3வது இடத்தை பிடித்தார். அதன்பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் சினிமா பட வாய்ப்புகள் என அடுத்தடுத்து ரம்யா பாண்டியனுக்கு சான்ஸ் கிடைத்து தற்போது மறுபடியும்  செம பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ரம்யா பாண்டியன் பெங்களூருவில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கு பணிபுரிந்து  வந்த யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு உருவான நல்ல நட்பு  காதலாக மாறியது. 


 இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இவருக்கும் யோகா மாஸ்டர் லவ்ல் தவானுக்கும் நவம்பரில்  திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இருவரும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது நடிகை ரம்யா பாண்டியன் வருங்கால கணவருடன் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இருவரின் திருமணம் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக நெட்டிசன்கள் பதில் அளித்துவருகின்றனர்.  

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.