LCU : லோகேஷ் சினிமேட்டிக் யுவினர்சில் இணைகிறதா சிவகார்த்திகேயனின் மாவீரன்..?
ராகேஷ் தாரா October 28, 2024 06:14 PM

எல்.சி.யு

மாநாகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனக்கேன் ஒரு தனி சாம்ராஜியத்தையே உருவாக்கியிருக்கிறார். ஒரு ஸ்டார் நடிக்கும் படத்தில் இன்னொரு ஸ்டார் நடிப்பதை கெளரவ் குறைச்சலாக நினைத்த காலம் போய் லோகேஷின் படத்தில் நடித்து விடமாட்டோமா என்று நினைக்கும் காலம் வந்துவிட்டது.  லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் கைதி 2 படத்தை அவர் இயக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸில் நடித்த அத்தனை நடிகர்களையும் வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். இதன்படி கார்த்தி , கமல் , சூர்யா , ஃபகத் ஃபாசில் , விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைவரும் கைதி 2 படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். எல்.சி.யு வை பற்றிய ஒரு சிறு அறிமுகமளிக்கும் வகையில் குறும்படம் ஒன்றையும் லோகேஷ் இயக்கியுள்ளார். இந்த குறும்பட விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

எல்.சி.யுவில் இணைகிறதா சிவகார்த்திகேயனின் மாவீரன்?

எல்.சி.யு வில் உருவாகும் படங்களை தான் மட்டும் இல்லாமல் பிற இயக்குநர்களுடன் சேர்ந்து இயக்கவிருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கூடிய விரைவில் இணைய இருப்பதாகவும் அவர் சமீபத்தில் தெரிவித்தார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் கதாபாத்திரத்தை எல்.சி.யுவிற்கு அவர் கொண்டு இருப்பதாக தற்போது சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றிபெற்ற படம் மாவீரன். சூப்பர்ஹீரோ கதைக்களத்தை எதார்த்தமாக இப்படத்தில் கையாண்டிருந்தார். 

லோகேஷ் கனகராஜ் மற்றும் மடோன் அஸ்வின் இணைந்து மாவீரன் கதாபாத்திரத்தை எல்.சி.யுவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் , நாகர்ஜூனா. செளபின் சாஹிர் , உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் சத்யராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. 


© Copyright @2024 LIDEA. All Rights Reserved.