தளபதிக்கு பின்னால் அஸ்தமிக்கும் சூரியன்….. இதற்கு இதுதான் அர்த்தமா…? வைரலாகும் மாநாடு போட்டோ…!!
SeithiSolai Tamil October 28, 2024 03:48 PM

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது அதில் விஜய் அவர்களின் எழுச்சி மிக்கப் பேச்சு அவரது தொண்டர்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடையே அவருடைய அரசியல் பயணம் குறித்த ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது. தனது முதல் மாநாட்டிலேயே வெளிப்படையாக பலரையும் சுட்டிக்காட்டி இவர்கள்தான் எனக்கான எதிரிகள் என குறிப்பிட்டுள்ளார். அதன்படி

இவருடைய பிரதான எதிரிகளில் ஒன்றாக திமுக இருப்பதை அவர் சுட்டிக் காட்டி இருந்தார். இந்நிலையில் பெரிய அளவில் கட்வுட் விஜய் அவர்களுக்கு மாநாட்டு திடலில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. அதில், ஒன்றில் திமுகவின் ஆட்சி முடியப்போவதை சுட்டிக்காட்டும் விதமாக திட்டமிட்டு அந்த கட்வுட் வைக்கப்பட்டதா என்ற கேள்வி எழும்பும் விதமாக சரியாக சூரியன் அஸ்தமிக்கும் பகுதிக்கு நேராக அந்த கட்அவுட் அமைந்துள்ளது.

பின்னால் சூரியன் அஸ்தமிக்க அதற்கு முன்னாள் தளபதியின் கட்அவுட் கட்டைவிரல் வெற்றிக்குறியை காட்டும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. இது திமுகவின் ஆட்சி முடிந்து தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி நிலவப் போவதை குறிக்கும் வகையில் இருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.