Ration Shop: 10th, +2 படித்தவர்களுக்கு வேலை... காலியிடங்கள் 3280 | மாவட்டம் வாரியாக முழு விவரங்கள்
Vikatan October 28, 2024 11:48 PM

Ration Shop Recruitment 2024: தமிழ்நாடு முழுவதும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு 3280 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: விற்பனையாளர் (Salesman)

சம்பளவிகிதம்: ரூ.8,600 - 29,000

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: (Packer) கட்டுநர்

சம்பளவிகிதம்: ரூ.7,800 - 26,000

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: Ration Shop Recruitment 2024

வயதுவரம்பு:

  • குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

  • பொதுப்பிரிவினர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர்களுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.

  • பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்று திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

  • கணவரை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது. 1.7.2024 தேதியின்படி வயது கணக்கிடப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத்தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.

கட்டுநர் பணிக்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலும், விற் பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலும் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்முகத்தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்வர்களுக்கு மின் அஞ்சல் மூலம் அழைப்பு அனுப்பி வைக்கப்படும்.

தமிழில் நன்றாக பேச, எழுத, வாசிக்க தெரிந்தவர்கள் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Ration Shop Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

விற்பனையாளர் பணிக்கு ரூ.150.

கட்டுநர் பணிக்கு ரூ.100. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம்  செலுத்த வேண்டும்.

SC/ST/PWD பிரிவினர்கள் மற்றும் அனைத்து பிரிவையும் சேர்ந்த கணவரை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

 விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணபிக்க கடைசி நாள்: 7.11.2024

 ஆன்லைன் விண்ணப்பப்படிவம், காலியிட விபரம் ஆகியவை அந்தந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலைய (District Recruitment Bureau) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்

 மாவட்ட வாரியாக இணையதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டகளைச் சேர்ந்தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து காலியிடங்கள் உள்பட மேலும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பம் செய்யுங்கள்:  

  • அரியலூர்

  • சென்னை

  • கடலூர்

  • திண்டுக்கல்

  • கன்னியாகுமரி

  • கிருஷ்ணகிரி

  • மதுரை

  • நாமக்கல்

  • பெரம்பலூர்

  • ராமநாதபுரம்

  • சேலம்

  • தேனி

  • திருச்சி

  • திருவள்ளூர்

  • திருவண்ணாமலை

  • விழுப்புரம்

  • கள்ளக்குறிச்சி

  • கோவை

  • தர்மபுரி

  • ஈரோடு

  • காஞ்சிபுரம்

  • செங்கல்பட்டு

  • கரூர்

  • நாகப்பட்டினம்

  • மயிலாடுதுறை

  • நீலகிரி

  • புதுக்கோட்டை

  • சிவகங்கை

  • தஞ்சாவூர்

  • தூத்துக்குடி

  • திருநெல்வேலி

  • தென்காசி

  • திருப்பூர்

  • திருவாரூர்

  • வேலூர்

  • ராணிப்பேட்டை

  • திருப்பத்தூர்

  • விருதுநகர்

  • © Copyright @2024 LIDEA. All Rights Reserved.