நம் முன்னோர்கள் பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என சொல்லியிருக்கின்றனர்..இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்...
சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்...இது அவர்களது நன்மைக்காகத்தான்...
உண்மை இது தான்
கால் போட்டு அமருவது மிகப்பெரிய மருத்துவ அவசர நிலையை உருவாக்குவது இல்லை. ஆனால், நீண்ட நேரம் அப்படி அமரும்போது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகளில் ரத்த ஓட்டம் குறைவது, கால் வலி என்று தற்காலிக பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறது மருத்துவம்.
கர்ப்பகாலத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் கணுக்கால் வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.
அப்படி இருக்க, கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் கர்ப்பப்பை பாதிக்கும் என்று பலர் சொல்வதை கேட்டிருப்போம் . இது உண்மையா என்று மருத்துவர் சொன்ன பதில் இது தான் .
“சிறிது நேரம் கால் மேல் கால் போட்டு அமர்வதால் கர்ப்பப்பை பாதிக்கும் என்று கூற முடியாது. நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் கர்ப்பப்பை பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொதுவாக, நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமர்வது இரு பாலருக்கும் நல்லது இல்லை.
நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமரும்போது, உடலின் அமைப்பு (Posture) மாறும். இதனால், இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படலாம். செரிமான குறைபாடு ஏற்படலாம். கால், தொடைப் பகுதி மறத்துப்போகலாம். எனவே, நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு உட்கார்வதை ஆண், பெண் இருவருமே தவிர்ப்பது நல்லது” என்றார்.