உத்தர் பிரதேஷ் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஒருவர் தான் விற்பனை செய்யும் பாலில் எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொளியில் அலம் என்ற பால் வியாபாரி ஒரு பாத்திரத்தில் இருக்கும் பாலை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுகிறார்.
அப்போது அவர் பாலை மாற்றும் பாத்திரத்தில் எச்சில் துப்புகிறார். இது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.